தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

எல்லோரும் கூடியே


எல்லோரும் கூடியே
எல்லோரும் கூடியே
சங்கீதம் பாடியே
ராஜாவை வாழ்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்


1. இருள் புூமியையும்
காரிருள் ஜனங்களையும்
மூடினாலும் கர்த்தாவே நீர்
என் மேல் உதிப்பீரே
இயேசய்யா ஸ்தோத்திரம்
ஒசன்னா ஸ்தோத்திரம்


2. நீதியின் சூரியனே
நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
என் துக்கம் முடிந்திட்டதே


3. நித்தியமாய் மகிழ்ச்சி
தலைமேல் இறங்கிடுதே
சஞ்சலமும் தவிப்பு எல்லாம்
விலகி ஒடிடுதே


4. கூட இருப்பவரே
விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
எனக்குள் வந்தவரே