தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

என்னோடு இருப்பவரே


என்னோடு இருப்பவரே - இயேசுவே
எனக்காக வாழ்பவரே
கோடான கோடி உள்ளங்கள் தேடி
பாடி மகிழ்ந்திடுமே - உம்
பாதம் பணிந்திடுமே


1. என்னில் வாழ்வது நானுமல்ல
இயேசுவே என்னில் வாழ்கின்றீர்
கர்த்தர் என் பெலனும் கீதமுமானீர்
கன்மலையுமானீர்
கர்த்தாவே என் நிழலானீர்
என் மறைவிடமாய் நீரானீர்
அல்லேலுயா அல்லேலுயா - உம்மில்
என்னை மறந்தேனய்யா


2. காற்றும் கடலும் கல்மழையும்
கானம் பாடி போற்றுமே
துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்
துயவர் புகழ் பாடுமே
சிறகுகள் அடித்திடும் பறவையுமே
சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே
அல்லேலுயா அல்லேலுயா - நானும்
சேர்ந்து துதித்திடுவேன்


3. சூரிய சந்திரன் நடசத்திரங்கள்
சூழ்ந்து உம்மை போற்றுமே
வானிலும் புூவிலும் உள்ளவை யாவும்
வாழ்த்தி வலம் வருமே
வானுக்கும் புூமிக்கும் உயர்ந்ததல்லோ
வானவரே உம் மகிமையல்லோ
அல்லேலுயா அல்லேலுயா - துதி
கனம் மகிமை உமக்கே