தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

எந்தன் நெஞ்சமெல்லாம்


எந்தன் நெஞ்சமெல்லாம்
நன்றி சொல்லிடுதே
உள்ளத்தின் ஆழத்திலே
ஆராதனை செய்து
நன்றி என்றும் நான் மறவேன்
கண்ணீரோடு நன்றியையே
காணிக்கையாய் ஆக்குகிறேன்


1. நோயின் கொடுமையிலே மரண படுக்கையிலே
கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து
கலங்கி தவித்த நேரத்திலே
இனி பிழைப்பேனோ என்ற நிலைமையிலும்
ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே
இயேசைய்யா நீர் எனது வைத்தியரே - எந்தன்


2. எதற்கும் உதவாத குப்பை நானய்யா
அற்பமான என்னையும் கூட
உமக்காய் தெரிந்து கொண்டிரோ
எல்லோருமே என்னை வெறுக்கையிலே
உந்தன் பார்வைக்கோ நான் அருமையானேன்
இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே - எந்தன்


3. சிரித்த போதெல்லாரும் கூட இருந்தனரே
அழுத போதோ யாரும் இல்லையே
நான் மட்டும் தானே அழுதேனே
என் வாழ்விலும் என் தாழ்விலுமே
இன்ப துன்பமோ எந்த நிலையிலுமே
பிரியாமல் நீர்் கூட இருக்கின்றீரே