தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

என்ன வந்தாலும்
1.என்ன வந்தாலும் எது வந்தாலும்
என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
இதயம் முழுவதுமே தந்த ஸ்தோத்தரிப்பேன்


2.யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
யார் பேசினாலும் யார் துசித்தாலும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
கர்த்தரில் மகிழ்ந்து நானும் பாடி ஸ்தோத்தரிப்பேன்
கண்களில் ஆனந்த கண்ணீர்
பொங்க ஸ்தோத்தரிப்பேன்
மனதை பறிகொடுத்தே உம்மை ஸ்தோத்தரிப்பேன்


3.சுகமேயாயினும் இல்லாமல் போயினும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
வாழ்ந்திருந்தாலும் வீழ்ந்து போனாலும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கி
தினமும் ஸ்தோத்தரிப்பேன்
மெய்யான விசுவாசத்தோடு
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
நீரே போதும் போதும் என்றும் ஸ்தோத்தரிப்பேன்