தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

என்னுயிரே என்னுயிரே


என்னுயிரே என்னுயிரே
என் இதயத்தில் வாழ்பவரே
பேச்சினிலும் என் மூச்சினிலும்
நினைவிலும் கலந்தவரே


1. நான்விடும் மூச்சும் பொழுதெல்லாம்
இயேசு இயேசென்று சொல்லிடுதே
இராவிலும் பகலிலும் இருதயமும் - என்
இயேசுவுக்காக துடிக்கிறதே
உள்ளமெல்லாம் உடலெல்லாம்
உம் நினைவாய் இருக்கின்றதே


2. எனக்காகவே இரத்தம் சிந்தினீரே
எனக்காகவே மரித்துயிர்த்தீரே - இந்த
செயலாலே என் இருதயத்தை
உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே
உம் அன்பாலே நான் மயங்கி
உம்மை நேசிக்க துணிந்தேனே


3. இருளாய் கிடந்த தேகமெல்லாம்
தேவ ஆலயம் ஆகினதே - இனி
நானும் எனக்கு சொந்தமல்ல
எனதெல்லாமே இனி உம் சொந்தமே
இதயத்திலேயும் உம்மை தவிர
வேறு எவருக்கும் இடமில்லையே