தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

ஒசன்னா பாடி பாடி


ஒசன்னா பாடி பாடி நேசரை தேடி
ஆத்துமா ஆடிப்பாட வாஞ்சிக்குதே
நிலையில்லா இந்த வாழ்வில்
அளவில்லா அன்பு செய்தீர்
சாட்சியாக நானிருந்து
உந்தன் அன்பை எடுத்துச் சொல்வேன்


1. ஆவியானவர் அன்பின் ஆண்டவர்
அடிமையெனக்காய் மனிதனானீர்
களிமண்ணாலே வனைந்த என்னை
கழுவியெடுக்க குருதி ஈந்தீர்
சிந்திய இரத்தம் எனக்காயல்லோ
பொன்னும் வெள்ளியின் விலைதான் தருமோ
உம்மைப் போல் ஆண்டவர் யாருமில்லை
உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை
உம்மையல்லால் ஓரு வாழ்வும் எனக்கில்லை
ஒசன்னா பாடி பாடி


2. வான துதர்கள் வாழ்த்துப்பாடிட
வாகை சூடி வானில் வருவீர்
மேகக் கூட்டங்கள் மேளம் முழங்க
மகிமையோடு இறங்கி வருவீர்
காத்திருந்தவை கண்டு மகிழ
கர்த்தரோடு வானில் எழும்ப
இன்பமோ துன்பமோ இனிவரும் நாளில் - என்
இருதயத்தால் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
நீர் வரும்வரை உம் வழி நிலைத்திருப்பேன்
ஒசன்னா பாடி பாடி