தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

கண்மணிபோல் காக்கும்


கண்மணிபோல் காக்கும் இயேசு ராஜா
கைவிடாத கர்த்தர் இயேசு ராஜா
ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
ஊற்றிடும் எந்நாவில் ஊற்றிடும்
இயேசு ராஜனே ஸ்தோத்திரம் அல்லேலுயா
ராஜராஜனே ஸ்தோத்திரம் அல்லேலுயா அல்லேலுயா


1. நான் பிறந்த நாள் முதல் இந்த நாள்வரையிலும்
ஆதரித்து வந்த இயேசுவே
இந்த மட்டும் கைவிடாமல்
இனி மேலும் கைவிடாமல்
இன்றுமென்றும் தேற்றும் இயேசுவே
தந்தை தாயின் பாசமோ - உந்தன்பாசமாகுமோ
சொந்த பந்த நேசமோ - உந்தன் நேசமாகுமோ
போதுமையா உந்தன் நேசமைய்யா
இயேசு ராஜனே ஸ்தோத்திரம் அல்லேலுயா


2. தீமையான யாவையும் நன்மையாக மாற்றினீர்
தீங்கு நீக்கி என்னை மீட்டினீர்
இன்னல் வேளை வந்த போது
நல்ல வேளையாக வந்த
நண்பனாக நம்மை செய்திட்டீர்
இரக்கமுள்ள தேவனே - இரங்கி வந்த நாதனே
மீட்க வந்த மீட்பரே - தேடி வந்த தெய்வமே
போதுமைய்யா உந்தன் நேசமைய்யா - (2)
இயேசு ராஜனே ஸ்தோத்திரம் அல்லேலுயா