தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

காடு மேடு எல்லாம்


காடு மேடு எல்லாம் வாழ்வை
தேடி நானும் அலைந்தேன்
இயேசுவே மெய்யான வாழ்க்கையே
என்று இப்போ உணர்ந்தேன்
காடு மேடு எல்லாம் வாழ்வை
ஸ்தோத்திரம் தேவா (2)


1. கண்ணாலே காண்பதெல்லாம்
உண்மை என வாழ்ந்தேன்
கனவாய் போகும் என நினைத்திட மறந்தேன்
மனதில் நினைத்ததெல்லாம் அடைந்திடமுயன்றேன்
எதுவும் நிலையில்லை என்பதனை மறந்தேன்
உலக இன்பத்தையே தேடியே அலைந்தேன்
முடிவு! வேதனைமேல் வேதனையே அடைந்தேன்
எல்லாமே இழந்தேனே வாழ்வில் நானே இன்று
உலகம் என்ன என்று புரிந்தேன் நானே
காடு மேடு எல்லாம் வாழ்வை
ஸ்தோத்திரம் தேவா (2)


2. உலக உறவு எல்லாம் உண்மை என நம்பினேன்
உதறி தள்ளும் என நினைத்திட மறந்தேன்
தேவனை தேடாமல் மனிதரை தேடினேன்
எல்லோரும் கைவிடவே திகைத்து வாடினேன்
யார் யாரோ சொன்னார்கள் எதுவம் கேட்கலையே
துன்பந்தான் வந்த பின்பு புத்தியும் வந்ததே
இயேசுதான் மாறாத பந்தம்மையா - இந்த
சொந்தந்தான் என்றுமே நிலைக்கும்மையா
காடு மேடு எல்லாம் வாழ்வை
ஸ்தோத்திரம் தேவா (2)


3. இயேசுவை ருசித்த பின்பு உலகம் வெறுக்குதே
காலமெல்லாம் இயேசுவோடு வாழ்ந்திடவே தோணுதே
இயேசுவே போதும் என்று மனமும் சொல்லுதே
மற்றதெல்லாம் மாயையிலும் மாயை ஆனதே
எல்லாமே பார்த்துவிட்டேன் எதுவும் சோதனையே
நிம்மதி எதிலுமில்லை எல்லாம் சஞ்சலமே
இயேசுதான் மெய்யான நிம்மதியைய்யா அவர்
இல்லாமல் வாழவே முடியாதைய்யா
காடு மேடு எல்லாம் வாழ்வை
ஸ்தோத்திரம் தேவா (2)