தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

நேற்றும் இன்றும் என்றும்
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவா ஸ்தோத்திரம்
நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்
அற்புதமானவர் அதிசயமானவர்
செயல்களிலே மிக மகத்துவமானவரே...
ஸ்தோத்திரிப்போம் நாம் ஸ்தோத்திப்போம்
துதிபாத்திரரை நாம் ஸ்தோத்திப்போம்
ஸ்தோத்திர பலிகளை உதடினிலே - சொல்லி
ஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம்


2. அகில உலகை ஆண்டுகொண்ட ராஜா ஸ்தோத்திரம்
ஆயிரமாயிரம் சேனையளுடைய ராஜா ஸ்தோத்திரம்
உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர்
யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே...
ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம்
மிகப்பெரியவரை நாம் ஆர்ப்பரிப்போம்
உலகில் உள்ள சாத்தானை - ஜெயங்
கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம்


3. இன்றும் என்றும் ஜீவிக்கின்ற உயிரே ஸ்தோத்திரம்
இருக்கின்றவராய் இருக்கின்றவரே உமக்கேஸ்தோத்திரம்
சாவை வென்றவர் சர்வ வல்லவர்
சகலமும் செய்ய வல்லமையுள்ளவரே...
துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம்
உயிருள்ளவரை நாம் துதித்திடுவோம்
உலகின் முடிவு பரியந்தம் - நம்
உடனுள்ளவரை துதித்திடுவோம்