தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

துதி கனம் செலுத்துகிறோம்


துதி கனம் செலுத்துகிறோம்
திரியேசு தேவனுக்கே
ஆராதனை நாயகரே
என்றென்றும் புகழ்(துதி) உமக்கே


1. பரிசுத்தரே பரமபிதாவே
பரலோக ராஜாவே
இருளேதும் பாவமேதும்
இல்லாத துயவரே


2. பேரறிவும் ஞானமும் நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே
யோசனையில் பெரியவரே
மறைபொருள் உமக்கில்லையே


3. சர்வலோக நீதிபதியே
புூமியின் ராஜாவே
நீதியோடும் நிதானத்தோடும்
நியாயங்கள் தீர்ப்பவரே


4. என் உயிராய் இருப்பவர் நீரே
என் பெலன் சுகம் நீரே
என் வழியே சத்தியமே
உம்மாலே வாழ்கின்றேன்