தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

தேவனுக்கே மகிமையுண்டு


தேவனுக்கே மகிமையுண்டு
காலமெல்லம் என்றுமுண்டு
கர்த்தருக்கே துதியுமுண்டு
எப்பொழுதும் என்றுமுண்டு
இனிமையிலும் இனிமையுண்டு
இயேசுவின் நாமத்தில் மகிமையுண்டு
வெற்றியிலும் வெற்றியுண்டு
திருநாமத்திலே மீட்பு உண்டு
அல்லேலுயா......(4)


1. வானம் புூமி யாவும் என் தேவன் துதிபாடும்
ஜீவனுள்ள யாவும் என் தேவனையே வணங்கும்
மூச்சுள்ளவையாவும் என்தேவனை பாடிமுழங்கும்
முழங்கால்கள் யாவும் என்தேவன் முன்பு முடங்கும்
அகில உலகம் படைத்த
என் ஆண்டவர் இயேசுவினாலே
சகல ஜனங்கள் வாழ்வும்
புது ஜீவ ஒளியாய் ஆகும்
அல்லேலுயா


2. கர்த்தாவே உம் நாமம் தெவிட்டாத இன்பமாகும்
பிதாவின் சமூகம் பிரியமான என் தாகம்
உம்மைப் பார்த்த யாவும் புதகிருபையினாலே நிரம்பும்
உம்மைப்பாடும் நாவும் புது துதிகளினோலே பொங்கும்
நாதியில்லா வாழ்வில்
உம்கிருபை ஒன்றே போதும்
நாளும் நாடி வருவேன்
கர்த்தாவே உந்தன் சமூகம்
அல்லேலுயா