தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

தேவா உம்மை பாடும்


தேவா உம்மை பாடும்
நேரம் இன்ப நேரம்
இன்பத்திலோ துன்பத்திலோ
எந்த நேரமும் இன்பநேரமே


1. நாவு ஒன்று போதுமோ
நாதன் உம்மை பாடவே
நீரில்லமல் வாழ்விலே
யாரை நானும் பாடுவேன்
ஓரு கோடிபாடல் உமை பாடினாலும்
என் ஆசை என்றும் தீராதய்யா
உயிர்போகும் போதும் உமை பாடவேண்டும்
அதுவே ஆசையே - என்னில்... (2)


2. தேகமெல்லாம் பசியினால்
வாடிப்போக இருப்பேனே
இராமுழுதும் துக்கமும்
மறந்தும் கூட இருப்பேனே
ஒரு நாளும் உம்மை பாட மறந்து
உயிர் வாழ்த்தானே முடியாதையா
பறவைகள் கூட உமை பாடும் போது
நான் பாடாதிருப்பேனோ... (2)
தேவா உம்மை பாடும்
நேரம் இன்ப நேரம்
இன்பத்திலோ துன்பத்திலோ
எந்த நேரமும் இன்பநேரமே (2)