தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

தேவனே என்னோடு


தேவனே என்னோடு
நீர் கூட இருப்பதால்
எந்த குறையும் வாழ்விலே
ஒரு போதும் இல்லையே
தேவனே என்னோடு நீர் இருப்பதால் குறை எது


1. உண்ணும் உணவையே
வானம் கொடுக்குமோ - கீழ்க்
காற்றில் காடைகள் வந்து மலைபோல் குவியுமோ
நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே


2. கடலும் பிளந்திட ஒரு வழி உண்டாகுமோ
தரைபோல் நடந்திட தண்ணீர் விலகி நிற்குமோ
நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே


3. உம்மையே உறுதியாய் தினம் பற்றிக்கொண்டதால்
இந்நாள் வரையுமே நான் உயிரோடிருக்கிறேன்
என் தேவை யாவுமே நீர் அறிந்து இருக்கிறீர்
அதை செய்தும் முடிக்கிறீர்