தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

பிதாவே நன்றி சொல்கிறோம்


பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம்
துய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம்


1. தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரமே


2. நேசரே என் மேலே என்றும்
பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும்
அனுதினமும் முடிசூட்டினீரே


3. கடந்த நாட்களில் கண்மணிபோல
பாதுகாத்தீரே
சோதனையில் என்னை தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே


4. சகல ஆசிர்வாதங்களாவே
ஆசிர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மணக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே