தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

போற்றுவோம் போற்றுவோம்


போற்றுவோம் போற்றுவோம்
இயேசுவையே போற்றுவோம் - துதி
சாற்றுவோம் சாற்றுவோம் கர்த்தருக்கே சாற்றுவோம்
நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரை போற்றுவோம்
நம்மையும் மீட்க வந்த மீட்பரையே போற்றுவோம்
இயேசுவின் நாமமே நமது மேன்மையே


1. விண்ணுலகரோஜாவே மண்ணில் வந்து புூத்ததோ
விண்துத சேனையெல்லாம் வாழ்த்துப்பாடவந்ததோ
விண்மீன்கள் கூட்டத்தில்
இவர் விடிவு கால வெள்ளியோ
இராஜாக்கள் கூட்டத்தில்
இவர் இராஜாதிஇராஜாவோ
இவரும் நம்மை மேய்க்கும்
நல்ல மேய்ப்பர் என்பதாலோ
இவரையுமே மேய்ப்பர்களும் தேடியேவந்தார்களோ
நம் இதயம்கூட இன்று ஒரு மாட்டுத்தொழுவந்தானே
இதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே


2. உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையே
எந்த மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியே
இருளை போக்க வந்த விடியற்கால வெளிச்சமே
இன்னல்கள் போக்க எந்தன்
உள்ளம் வந்த இயேசுவே
பாவங்கள் போக்கிடவே மண்ணில் பிறந்தாரே
பரலோகில் சேர்த்திடவே என்னில் பிறந்தாரே
இவரே மெய்யான தேவன்
நம்மை தேடி வந்த தெய்வம்
உயிருள்ள நாளெல்லாம் அவரையேபாடுவோம்