தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

மகிமையின் ராஜா எங்கள் தேவன் துநளரள


மகிமையின் ராஜா எங்கள் தேவன் துநளரள
மகத்துவ ராஜா எங்கள் தேவன் துநளரள
மன்னிக்கிற தேவன் எங்கள் தேவன் துநளரள
மரணத்தை ஜெயித்தவர் எங்கள் தேவன் துநளரள
அடைக்கலம் புகழிடம் மறைவிடம் துநளரள
அநுகூலமான துணை அரணும் துநளரள
அற்புதங்கள் அதிசயம் செய்பவர் துநளரள
அன்பினிலும் பண்பினிலும் உயர்ந்தவர் துநளரள
தாவீதின் சங்கீதங்கள் பாடி என்
தேவனை என்றும் துதிப்பேனே


1. இரக்கமும் உருக்கமும் உள்ளவர் துநளரள
இரட்சகரும் மீட்பரும் மேய்ப்பரும் துநளரள
கன்மலை கோட்டையும் கேடகம் துநளரள
கண்மணிபோல் என்னை காப்பவர் துநளரள
நல்லவரும் வல்லவரும் நம்பிக்கையும் துநளரள
நெருக்கத்தில் இடுக்கத்தில் அடைக்கலம் துநளரள
சத்தியமும் ஜீவனும் வழியும் துநளரள
சகலமும் உலகமும் படைத்தவர் துநளரள
தாவீதின் சங்கீதங்கள் பாடி - என்
தேவனை என்றும் துதிப்பேனே


2. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிற போது
எனக்கெதிராய் வந்து நிற்பவன் யார்
கர்த்தர் என் நிழலாய் இருக்கின்ற போது
எனக்கெதிராய் வலை விரிப்பவன் யார்
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்ச்சிப்புமானார்
யாருக்கு அஞ்சி பயப்படுவேன்
சேனைகளின் கர்த்தர் என்னோடிருந்து
சத்துருவின் தலையை மிதித்திடுவார்
தாவீதின் சங்கீதங்கள் பாடி - என்
தேவனை என்றும் துதிப்பேனே


3. தாயின் வயிற்றில் தெரிந்துகொண்டார்
தாய் தகப்பனை போல தேற்றுகிறார்
தகப்பனும் தாயும் கைவிட்டபோதும்
தேவன் என்னை சேர்த்துக்கொண்டார்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
ஆண்டவரை நான் ஸ்தோத்தரிப்பேன்
தாவீதின் சங்கீதங்கள் பாடி - என்
தேவனை என்றும் துதிப்பேனே


4. புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நிறுத்தி
அனுதினம் ஆறுதல் தேறுதல் படுத்தி
நீதியின் பாதையில் நடத்துகிறாரே
கர்த்தர் என் மேய்ப்பர் ஆத்தும நேசர்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
கடைசிவரை அவர் நாமத்தை உயர்த்தி
காலமெல்லாம் புகழ் பாடிடுவேன்
தாவீதின் சங்கீதங்கள் பாடி - என்
தேவனை என்றும் துதிப்பேனே