தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

மனமே நீ வருத்தம்


மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
நம் இயேசுவின் அன்பு உண்டு - அது
உனக்கு என்றும் உண்டு


1. நினைத்த காரியம் வாய்த்திடாமல்
வாடிப்போனாயோ
பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே
பயந்து போனாயோ
நம் இயேசுவின் கரங்களே அதனை
இனி செய்து முடித்திடுமே (2)
ழு ! ஆல டுழசன ிசயளைந வாந டுழசன


2. நோய்களினாலே பெலனிழந்து மனம்
நொடிந்து போனாயோ
மரணந்தான் இனி முடிவென்று சொல்லி
மெளனம் ஆனாயோ
நம் இயேசுவின் தழும்புகளாலே
சுகமடையா நோய்களில்லை (2)
ழு ! ஆல டுழசன ிசயளைந வாந டுழசன


3. சோதனை மேலே சோதனை வந்து
சோர்ந்து போனாயோ
விடுதலை பெறவே வழி தெரியாமல்
துவண்டு போனாயோ
நம் இரட்சகர் இயேசுவினாலே
விடுதலை உனக்கென்றுமுண்டு (2)
ழு ! ஆல டுழசன ிசயளைந வாந டுழசன