தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

ஜெயக்கிறிஸ்துவிலே


ஜெயக்கிறிஸ்துவிலே நாம் ஜெயம் எடுப்போம்
என்றும் தோல்வி நமக்கு இல்லையே
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
அல்லேலுயா அல்லேலுயா
ஒசன்னா ஒசன்னா


1. யூதராஜா சிங்கமே இயேசு
யுத்தத்தில் வல்லவரே
யுத்தங்களை ஒயப்பண்ணும்
அவரின் வலக்கரமே
நம் வாழ்வில் செங்கடல் பிளந்துவிட்டார்
சத்துரு சேனை அதிலே மூழ்கடித்தார்


2. ஜெயமில்லாத தமது வாழ்வை
ஜெயமாய் மாற்ற வந்தவர்
தேவனாலே பிறக்க வைத்தவர்
உலகம் ஜெயிக்க வைத்தார்
விசுவாசத்திலே நம்மை பெலப்படுத்தி
நம் வாழ்க்கையிலே ஜெயம் தந்துவிட்டார்


3. வேதனை சோதனை பாடுகள் எல்லாம்
நம்மை என்ன செய்திடும்
வியாதி வறுமை நிந்தைகள் நெருக்கம்
நம்மை என்ன செய்திடும்
இதை நமக்காய் சிலுவையில் சகித்துவிட்டார்
எல்லாம் சுமந்து தீர்த்து ஜெயித்து விட்டார்