தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

விண்வெளி கடந்து வேகமே செல்லும்
நேரம் நெருங்கிடுதே - இந்த
மண்வெளி வாழ்விற்கு வந்தனஞ் சொல்லிடும்
நாள் இதோ வந்திடுதே

1 பார்தனில் பக்தர்கள் ஆவலைத் தீர்த்திடும்
பரவச நாள் வருமே - அந்த
சீர்மிகும் சீயோனை சேர்ந்திடும் நாள்
மிக சீக்கிரம் வந்திடுமே (2)
இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்
பட்டவர்கள் ஏகிடும் நாள் வருமே
மாசில்லா தேசத்தை நேசிப்போர் கண்டதை
மகிழ்ந்திடும் நாள் வருமே - விண்வெளி

2 பரிசுத்த ஆவியால் முத்திரை பெற்றவர்கள்
பிறந்திடும் நாள் வருமே - அந்த
பரிசுத்த ஜீவியம் செய்து நின்றோர்
ஏங்கிடும் நாள் வருமே (2)
சந்திரன் சூரியன் நட்சத்தரமல்ல
நாம் போக நாடும் இடம்
அந்தரத்தில் அவை யாவும் படைத்தோனின்
அருள் மிகும் மோட்சமதே - விண்வெளி