தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

குருசினில் இயேசு பரன் குருதி வடிந்து
சிரசினில் முள்முடியும்
சிந்தையில் நிந்தைகளும்
ஏற்று உனக்காய் மரித்தாரே - இயேசு
--குருசினில்

1 தந்தையின் சித்தம் முடத்திடவே
தரணியில் தம்மை தந்தனரே
காயங்கள் யாவும் ஏற்றவராய்
கனிவுடன் உன்னை அழைக்கின்றார்

2 பாவம் சாபம் ஏற்றவராய்
பரிவாய் உன்னைத் தேடி வந்தார்
கால்கள் கரங்களில் உதிரமாக
கனிவாய் இன்றே அழைக்கின்றார்